11.01.2012

இனி இனிக்கும்


மனதிலிருந்து எந்த நினைவுகளையும்
அழித்துவிட முடியாது
என்று சாலையைக் கடக்கையில்
உன்னைக் கணடதும்
தான் தோன்றியது.
இரண்டு வருடங்களுக்கு முன்
இதே சாலையில் கைக்கோர்த்தபடி
நடந்த அந்த இரு உருவங்கள்
பளிச்சென மின்னல் போல்
என் மனக்கண் முன் வந்துப் போனது
அதே உருவங்கள் தான் இன்றும்
வேறு ஒரு பரிமாணத்தில் மாறி
உலகில் உலவிக் கொண்டிருப்பதாய்
எனக்கு எண்ணத் தோன்றியது.
என் சிந்தனையை சட்டென
உனதுப் பார்வை கலைத்துப் போட்டது.
நீ என்னைப் பார்த்தப் பார்வையில்
உன்னைப் பற்றிய எந்த உணர்வும்
வெளிப்பட்டுவிடக் கூடாதே என்ற
அச்சஉணர்வு உனக்கிருப்பதை
என்னால் உணர முடிந்தது.
அந்தப் பார்வையை விலக்காமல்
என்னருகில் வந்து
நின்றாய்
பழைய நினைவுகளின்
எந்த சுவடுமின்றி
நிகழ்வில் ஒரு வார்த்தையை
பிரயோகிப்பது எத்தனை கடினம்
என்பதை அந்நொடி தான் உணர்ந்தேன்
ஏனெனில் அந்த முயற்சியில்
நானும் தோற்றேன் நீயும் தோற்றாய்
உனது விழியும் எனது விழியும்
சந்தித்துக் கொண்ட அந்த தருணம்
மட்டும் எதுவும் பேசாமல்,
எதையும் கேட்காமல் அந்த நொடிகள்
கடந்துவிடக் கூடாதாயென்று
மனம் துடித்தது.
வாகனங்களின் சத்தத்திலும்
உனது சுவாசக்காற்றின் துடிப்பை
என்னால் உணர முடிந்தது.
என்ன தான் நாம் பேசிவிட முடியும்
என்றெண்ணுகையில் தான்
எதிர்ப்பார்க்காத ஒரு கேள்வியை
கேட்டாய் நீ
நல்லாயிருக்கீங்களா…?
வேண்டாம் நான் பொய்
சொல்ல மாட்டேன் என்றதுக்கு
எனக்கு வரும் என்று
சொன்ன நீ
நல்லாயிருக்கிறேன்
உன் நினைவுகள் இல்லாமல்
உன் கனவுகளும் இல்லாமல்
யாருடனோ எங்கையோ
என்றாய்…
மனதின் ஒட்டு மொத்த வலிகளும்
ஒரு வரியில் சரியாகி விட முடியுமா…?
என் விழிகள் அவளின் விழிகளை
நேருக்கு நேர் சந்தித்தது
கண்ணீர் மலர்கள் அவள் விழிகளில்
மலர்ந்து கன்னத்தின் வழியே
உதிர்ந்துக் கொண்டிருந்தது.
அந்த சாலையின் ஓரத்தில்
உன் கரங்களைப் பற்றி
உண்மை சொல்லட்டுமா என்றேன்
நீயும் தலையை ஆட்டினாய்
எனக்கு சர்க்கரை இனித்து
இரண்டு வருடமாகிறது. என்றதும்
நீ லேசாக நகைத்தாய்
உன் கரங்கள் என் கரத்தை
அழுத்தமாய் பற்றியது
இனி இனிக்கும் என்று
கன்னத்தில் இருந்த ஈரத்தைத்
துடைத்தபடியே சொன்னாய் நீ

நட்புடன் 
தமிழ்ராஜா

10.30.2012

பீட்சா : துணிச்சலான பயமுறுத்தல்


       நான் இந்தப் படத்தை முதல் நாளேப் பார்த்துவிட்டேன். இருப்பினும் அதைப் பற்றி எழுத இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. அதான் ஒரு வாராமா நிறைய படித்துவிட்டோமே நீ என்ன மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு இங்கே நான் சொல்லிக் கொள்வது இது விமர்சனமல்ல… இது ஒரு விவாதம்.

Popular Posts