• 7.14.2012

  பில்லா 2 திரைவிமர்சனம்: பில்லா 2 தொழிநுட்ப மசாலா

   
       தல அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்திரையுலகின் இந்த வருடத்தின் மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய படம் என்ற ரீதியிலும் பில்லா 2வின் ரீலிஸ் கலக்கல் தான். அது மட்டுமின்றி சக்ரி டோலட்டி, யுவன்,ஆர்.டி ராஜசேகர், சுரேஷ் அர்ஷ் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்களுடன் வெளிவரும் படம் என்பதால் இதற்கு தொழில்நுட்ப ரீதியிலும் பல எதிர்ப்பார்ப்புகள். இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் தாண்டி கதை : இரண்டு முறை வெற்றிக் கொடிக் கட்டிய பில்லாவின் முன் பாதியை, பில்லா உருவான கதையை சொல்லப் போகிறது என்றதும் மக்கள் மத்தியில் இதற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு.
  இந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் படம் பூர்த்தி செய்கிறதா...?

  அஜித் இலங்கை அகதியாக ராமேஸ்வரத்தில் அறிமுகமாகிறார். அவர் சென்னைக்கு சென்று அண்ணாச்சி செல்வராஜ் இளவரசுவுடன் சேர லாரியில் மீன்கள் வழியே வைரக்கடத்தல் நடக்கிறது. அதற்கு அங்கிருக்கும் ஒரு பாயும் போலிஸ்க்காரரும் காரணமாகிறார்கள்.
       பிறகு அண்ணாச்சியுடன் வைர கடத்தலில் ஈடுபட இவருடன் இலங்கை அகதியாக ராமேஸ்வரத்தில் தங்கியிருந்தவர்களும் துணை நிற்கிறார்கள். இலங்கை அகதிகள் பாவம் ...? இந்தப் படத்தைத் தவிர்த்தல் நன்று...
       பிறகு வைரம், கஞ்சாவாக மாற கோட்டி, மாபியா அப்பாஸியின் கையாள் உதவுகிறான். டேவிட் பில்லா கஞ்சாவுக்கு மாறுகிறார். அப்பாஸியுடன் கைக் கோர்க்கிறார்.
       பிறகு கஞ்சா ஆயுதமாகிறது. அதற்கு வெளிநாட்டு டான் டிமித்ரி உதவுகிறார். டேவிட் பில்லா வெளிநாட்டிற்கு சென்று அவரிடம் கைக் கோர்க்கிறார். இந்த விஷயம் லோக்கல் டானான அப்பாஸிக்குத் தெரிய வருகிறது. அப்பாஸியை தல போட்டுத் தள்ளுகிறது. 

       பிறகு டேவிட்டிற்கும் டிமித்ரிக்கும் ஆயுதக் கடத்தல் ஒப்பந்தத்தில் ஒரு தகராறு ஏற்படுகிறது. அந்தத் தகராறில் லோக்கல் அரசியல் தலைக் காட்டுகிறது. இதற்கு நடுவில் அக்கா பாசம். அக்காவின் மகள் பார்வதி ஓமன குட்டன் (ஜாஸ்மீன்) என்று கொஞ்சம் திரைக்கதை குடும்ப ராகம் பாடுகிறது. ஜாஸ்மினுக்கு கதையில் பிடிப்பு வேண்டுமென்று அப்பாஸியின் காதலி ப்ருனாவிடம் அஜித்தை பழகவிட்டு பொறாமை தீயை கொஞ்சம் திரைக்கதைக்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். இறுதியில் இண்டர்நேஷ்னல் டானான டிமிதிரியை கொன்றுவிட்டு, டேவிட் பில்லா இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் பொழுது, அஜித் கொல்லாமல் விட்டவர்களையெல்லாம் அவர்களுடைய ஆட்கள் ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளுகிறார்கள். படம் முடிவடைகிறது
  அப்பாடா எப்படியோ ஒரு டானின் வரலாற்றைச் சொல்லிவிட்டோம் என்ற ஆசுவாசம் தெரிகிறது இயக்குனரின் திரைக்கதையில்....

       இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. பார்ப்பவர்கள் அனுமானிக்கும் திரைக்கதை தான். அதுவும் ”” “உச்”“ கொட்ட வைக்கும் இடங்கள் அதிகம். இசையாவது ரசிக்கலாமென்றால் அதுவும் சொல்லும்படியாக இல்லை.
       படம் ஆரம்பத்தில் அஜித்தை அடிக்கும் பொழுது அவர்களை வார்த்தைகளால் வசைப் பாடிய தல ரசிகர்கள் “ என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கனதுடா  என்று சொல்லும் பொழுது திரையரங்குள் ஆரவாரம் காதை அடிக்கிறது. மேலும் “ நல்லவனை கண்டுப்பிடிக்கிறது தான் கஷ்டம்.” “
  போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். ஜெயிச்சா போராளி, ஜெயிக்கிற வரைக்கும் தீவிரவாதி அருமையான வசனம். இது போல் இன்னும் சில இடங்களில் தலைக்கு அசத்தும் வசனங்கள். மற்றபடி அஜித் ஹெலிக்காப்டரில் பறந்துக் கொண்டே போடும் சண்டைக் காட்சிகள் அருமை. இப்படி சில இடங்களில் மட்டுமே படம் கைத் தட்ட வைக்கிறது.
       திரைக்கதையில் எத்தனை ஓட்டை என்று பார்க்கும் ஒவ்வொருவரும் அனுமானித்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் கைத் தட்டிய ரசிகர்கள் இடையில் என்ன மாபள் இது...? என்று சலித்துக் கொள்ளும் குரலைக் கேட்க முடிகிறது.
       படத்தில் திரும்பும் திசையெல்லாம் தலை வருவதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆக்‌ஷன் பிலாக்கையெல்லாம் அனாசியமாக தட்டித் தூக்குகிறார் திரைக்கதையில் இயக்குனர். அதெப்படி தான் ஒரு முதல்வரை இப்படியெல்லாம் போட்டுத் தள்ளுகிறீர்களோ...?
       அப்பாஸியின் காதலி ப்ருனோ அஜித்திடம் மயங்குவது இயல்பு. ஆனால் ஏன் கோட்டியின் போனுக்கு மயங்குகிறாள். இப்படி திரைக்கதையை நகர்த்த வேண்டிய இடத்திலெல்லாம் ஆட்களை போட்டுத் தள்ளுவது என்று புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குனர். அஜித்தையும், துப்பாக்கியையும், உயரமான மெலிந்த தொப்புள் தெரிய ஆடை அணியும் பெண்களையும் காட்டி படத்தின் திரைக்கதையை சரி செய்ய முயன்றிருக்கிறார். அஜித் மட்டுமே திரைக்கதையை தன்னந்தனியாக நகர்த்திச் செல்கிறார்.    வெளியில் வந்தவுடன் ஒரு டானின் வரலாறு இப்படித் தான் இருக்கும் என்று ஒரு தல ரசிகர் இயக்குனருக்கு வக்காளத்து வேற வாங்குகிறார். மொத்ததில் பில்லா தொழில்நுட்ப மசாலா.
       தமிழில் எல்லா வரலாறும் கலை நயத்துடன் தான் சொல்லப்பட்டிருக்கிறது. இது வரலாறு என்ற பெயரில் கொலையாறு.
  ரசிகனாக தலைக்கு ஒரு வேண்டுகோள் : தலை இப்படிப்பட்ட இயக்குனர்களுடன் பணியாற்றி அவர்களை தூக்கிவிடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள்.


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே